செவ்வாய், 14 ஜூலை, 2026

பதிவு 319: கிணற்றுத் தவளைகளும் காகிதக் கனவுகளும் — நாம் எப்போது சிந்திக்கப் போகிறோம்?

 பதிவு 319: கிணற்றுத் தவளைகளும் காகிதக் கனவுகளும் — நாம் எப்போது சிந்திக்கப் போகிறோம்?

இன்று நம் சமுதாயத்தில் இருக்கும் மிகப் பெரிய சாபக்கேடு என்னவென்றால், வரலாற்றை அதன் வடுவோடு உணர்ந்த தலைமுறைக்கும், வரலாற்றைக் வெறும் கதையாகக் கேட்கும் தலைமுறைக்கும் இடையே உள்ள பாரிய இடைவெளிதான்.

முப்பது ஆண்டுகால யுத்த பூமியின் வன்முறையையும், அதன் கொடூரங்களையும் நேரடியாகத் தன் உடலிலும் மனதிலும் சுமந்த ஒரு தந்தையின் தலைமுறைக்கு விளங்கும் உண்மை, இன்று முகநூலிலும் இன்ஸ்டாகிராமிலும் உணர்ச்சிவசப்படும் அவர்களின் பிள்ளைகளுக்கு விளங்குவதில்லை.

நாம் அனுபவித்தது சுதந்திரமா, அடிமைத்தனமா?

இன்றும் ஒரு சாரார் கடந்த கால பாசிசக் கொள்கைகளையும், ஆயுதக் கலாச்சாரத்தையும், தனிநபர் வழிபாட்டையும் ஒரு வீர வரலாறாகக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் தங்களைச் சுதந்திரமாக வாழ்ந்ததாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், உண்மை என்ன?

மாற்றுக்கருத்து பேச முடியாத, கேள்வி கேட்க முடியாத, தனிமனித சுதந்திரம் மறுக்கப்பட்ட ஒரு பாசிசக் கட்டமைப்பில் நாம் வாழ்ந்த முப்பது வருடங்களும் உண்மையில் அடிமைத்தனமே தவிர வேறில்லை. அங்கு வன்முறையைத் தவிர வேறு எதற்கும் அதிகாரம் இருக்கவில்லை.

ஆயுதக் கலாச்சாரம் என்பது ஒருபோதும் நிரந்தரத் தீர்வைத் தராது. அது ஒரு சமூகத்தையே வன்முறைக்குள்ளும், அறியாமைக்குள்ளும் முடக்கிப் போட்டுவிடும்.

ஜனநாயகத்தின் வழியும் உலக நீதியும்

இன்றைய உலகம் இராஜதந்திரத்தாலும், சர்வதேச நீதியாலும், ஜனநாயகத்தாலும் இயங்குகிறது. கிணற்றுத் தவளைகளாய் வாழ்ந்தால், உலக நீதியும் சர்வதேச சட்டங்களும் நமக்குத் தெரியாமலேயே போய்விடும்.

ஜனநாயகம் என்பது அற்புதம் வாய்ந்தது. அங்கே தவறுகள் நடக்கலாம், ஆனால் அவற்றை மாற்றுவதற்கான வாய்ப்புகள் எப்போதும் உண்டு.

 நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உங்கள் வாக்குகளால் ஒரு ஆட்சியை மாற்ற முடியும்.

 பிழையான பாதையில் செல்லும் ஒரு அரசாங்கத்தை நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் கலைத்துவிட முடியும்.

இத்தகைய மாறும் தன்மையும், மக்களின் கைகளில் இருக்கும் அதிகாரமும் ஒருபோதும் பாசிசக் கொள்கையிலோ அல்லது ஆயுத ஆதிக்கத்திலோ சாத்தியமில்லை.

இளைய சமுதாயத்தின் கைகளில்...

நாங்கள் எதை எங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறோமோ, அதை வைத்தே அவர்கள் தங்கள் எதிர்கால முடிவுகளை எடுப்பார்கள். ஆனால், இன்று துரதிர்ஷ்டவசமாகப் பலர் தவறான பிரசாரங்களினாலும், போலியான வீர உணர்ச்சிகளினாலும் வழிநடத்தப்பட்டு, அதே பாசிசக் குழிக்குள் மீண்டும் விழத் துடிக்கிறார்கள்.

ஆயுதக் கலாச்சாரம் ஒழிந்து, ஜனநாயகப் பாதையே சிறந்தது என்ற தெளிவு நமக்கு வர வேண்டும். இல்லையேல், நாம் கடந்து வந்த அதே முப்பது ஆண்டுகால இருண்ட அடிமைத்தனத்தை நோக்கித்தான் நம் எதிர்காலச் சந்ததியும் பயணிக்க நேரிடும்.

இறுதியாக ஒரு வார்த்தை...

எங்களால் வீடு வீடாக வந்து ஒவ்வொருவருக்கும் பாடம் நடத்த முடியாது. எங்களின் கடமை உண்மையை எழுதுவது மட்டுமே. இதை வாசித்து யாராவது ஒருவர் பயன் பெற்றால், யாராவது ஒருவரின் சிந்தனை மாறினால் அதுவே இந்த மண்ணுக்குக் கிடைக்கும் நற்பேறு.

இல்லையேல், மீண்டும் அதே தவறுகளைச் செய்து அழிவை நோக்கிச் செல்வது இந்தத் தலைமுறையின் சாபக்கேடாகவே முடியும்.

சிந்திப்போம்... செயல்படுவோம்!


"Post 319." It is written with a strong, reflective, and thought-provoking tone to capture the depth of your message for your English-reading audience.

Blog Post 319: Frogs in a Well and Paper Dreams — When Will We Finally Think?

Today, the greatest curse of our society is the massive disconnect between the generation that experienced history through its raw wounds and the younger generation that only hears about it as a series of romanticized stories.

What a father’s generation understands—having directly carried the trauma, violence, and scars of a thirty-year war in their minds and bodies—is completely lost on their children, who get easily swayed by emotional and superficial narratives on social media.

Did We Experience Freedom, or Slavery?

Even today, a certain group of people continues to glorify past fascist ideologies, gun culture, and personality cults as a "heroic history." They live under the illusion that they were free. But what is the truth?

In a fascist system where dissent was silenced, questions were forbidden, and individual liberties were completely stripped away, the thirty years we lived were nothing but slavery. In that setup, power belonged only to violence, not to the people.

Gun culture never yields a permanent solution. It only traps an entire society in a perpetual cycle of violence and ignorance.

The Path of Democracy and Global Justice

Today's world operates on diplomacy, international law, and democratic principles. If we choose to live like frogs in a well, we will remain completely blind to how global justice and international systems work.

Democracy is remarkable. It is not perfect, and mistakes do happen, but it always offers a mechanism for correction:

 Every four years, you have the power to change a government with your vote.

 If a government goes astray, it can be dissolved through a motion of no confidence.

This adaptability and the power vested in the hands of ordinary citizens can never exist under a fascist ideology or military dominance.

In the Hands of the Younger Generation...

Our children will make their future decisions based entirely on what we teach them today. Unfortunately, many today are being misled by false propaganda and fake heroism, rushing headfirst back into the very same fascist trap.

We must realize that gun culture must end, and the democratic path is the only viable way forward. If we fail to instill this clarity, our future generations will be condemned to walk back into the same thirty years of dark slavery that we barely survived.

A Final Word...

We cannot knock on every door and lecture every individual. Our duty is simply to write and speak the truth. If even one person reads this, begins to think, and changes their perspective, it is a victory for this society.

Otherwise, repeating the same mistakes and marching toward self-destruction will remain the ultimate curse of this generation.

Think... and act!

#EelamHistory #ஈழவரலாறு #EelamStruggle #Tamils #ஈழம் #Eelam #TamilHistory #நெறியூரன் #EROS #LTTE #TELO #EPRLF #PLOTE #ஈழத்துவரலாறு#ஆதிமுதல்இன்றுவரை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக