புதன், 8 ஜூலை, 2026

அத்தியாயம் 302: துப்பாக்கிப் பண்பாடும், மழுங்கடிக்கப்பட்ட சமூகத்தின் மௌனமும்

அத்தியாயம் 302: துப்பாக்கிப் பண்பாடும், மழுங்கடிக்கப்பட்ட சமூகத்தின் மௌனமும்

தமிழ் சமூகம் வரலாற்றிலிருந்து மிக முக்கியமாக உணர்ந்து கொள்ள வேண்டிய பாடம் ஒன்று உள்ளது. ஒரு இயக்கமோ அல்லது ஒரு அமைப்போ ஒரு கட்டளையையோ அல்லது கருத்தையோ சொல்லிவிட்டால், அதை எந்தவிதக் கேள்வியுமின்றி அப்படியே 'அக்செப்ட்' (Accept) செய்து ஏற்றுக்கொள்ளும் அடிமைத் தனத்திலிருந்து நாம் வெளியே வர வேண்டும். அவர்கள் எதற்காக அதைச் சொல்கிறார்கள், அதன் பின்னணியில் என்ன சுயநலம் இருக்கிறது என்ற குறைந்தபட்ச வரையறை கூட இல்லாமல், "அவர்கள் சொல்லிவிட்டால் அது சரியாகத்தான் இருக்கும்" என்று கண்மூடித்தனமாக நம்புவது ஒரு முட்டாள்தனமான சமூகத்தின் அடையாளமாகும்.

ஒருவர் பிழையே செய்திருந்தாலும், அவர் என்ன பிழை செய்தார், எதற்காகச் செய்தார், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் உண்மையானதுதானா என்பதை ஆராயும் எவ்விதச் சட்டப்பூர்வ கட்டமைப்பும் இல்லாதபோது, தண்டனை வழங்க நாம் யார்? தன்னாட்சி அதிகாரமோ, அங்கீகரிக்கப்பட்ட நீதிமன்றங்களோ அல்லது ஒரு முறையான நாடோ இல்லாத சூழலில், ஒருவரது உயிரைப் பறிக்கும் தண்டனையை வழங்க யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. கையில் ஒரு துப்பாக்கி இருக்கிறது என்பதற்காகவே நாங்கள்தான் 'பெரிய ஆட்கள்' என்றும், தாங்கள்தான் நீதிபதிகள் என்றும் நினைத்துக் கொள்வது காட்டுமிராண்டித்தனமான செயலாகும்.

இத்தகைய அநீதிகள் நடந்தபோது, மக்கள் தட்டிக்கேட்டிருக்க வேண்டும். ஆனால், துப்பாக்கிக்கு பயந்து, கேள்விகளே கேட்காமல் மௌனமாக இருந்தது ஒரு மழுங்கிய சமுதாயத்தையே குறிக்கின்றது. தன் சொந்தப் பிள்ளைகளையே சக இயக்கங்கள் சுட்டுக் கொன்றபோதும், வாயை மூடி, காதைப் பொத்திக் கொண்டு சுயநலமோடு இருந்ததன் விளைவைத்தான் இன்று ஒட்டுமொத்த சமூகமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. உலக நாடுகளின் பார்வையில், தங்களுக்குள் ஒரு முறையான நீதிக் கட்டமைப்பையோ, சகிப்புத்தன்மையையோ உருவாக்கத் தெரியாத ஒரு சமூகம், எப்படி ஒரு சுதந்திர நாட்டை வழிநடத்த முடியும் என்ற கேள்வியை இந்த மௌனம் உருவாக்கியது. கேள்விகள் கேட்காத சமூகம் ஒருபோதும் சுதந்திரமடைய முடியாது என்பதை இனிவரும் தலைமுறையாவது புரிந்து கொள்ள வேண்டும்.

Chapter 302: Gun Culture and the Silence of a Blunted Society

There is a vital lesson that the Tamil community must collectively realize from its history: we must break free from the submissive tendency to blindly accept any command or narrative put forth by a movement or organization without question. Believing without even a basic definition or scrutiny of why something is being said, or what underlying self-interest exists, and merely concluding that "if they said it, it must be right," is the ultimate hallmark of a foolish society.

Even if an individual has committed a mistake, who are we to dispense ultimate punishment when there is no legitimate legal framework to examine what mistake was made, why it occurred, and whether the accusation is even true? In an environment lacking sovereign authority, recognized courts of law, or a formal state, no one possesses the right to execution. To assume that merely holding a gun makes one supreme or qualifies them to act as judge, jury, and executioner is a deeply flawed and barbaric mind-set.

During those dark times, the populace should have demanded accountability. Remaining silent and refusing to question out of fear of the gun only indicates a blunted, paralyzed society. The entire community is paying the price today for closing its eyes and covering its ears while its own youth were executed by rival factions. In the eyes of the international community, this collective silence raised a fundamental question: how can a society that does not know how to establish internal justice or tolerance ever govern a free nation? The future generation must at least understand that a society that fails to question can never truly be free.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக