வெள்ளி, 3 ஜூலை, 2026

ஈழ வரலாற்றுப் பக்கம்: 279 தலைப்பு: பூகோள இராஜதந்திரக் குருட்டுத்தனம்: இந்திய எதிர்ப்புவாதமும் வல்லரசுச் சண்டித்தனமும் (Geopolitical Blindness: Anti-Indian Sentiment & Superpower Antagonism)

 ஈழ வரலாற்றுப் பக்கம்: 279

தலைப்பு: பூகோள இராஜதந்திரக் குருட்டுத்தனம்: இந்திய எதிர்ப்புவாதமும் வல்லரசுச் சண்டித்தனமும் (Geopolitical Blindness: Anti-Indian Sentiment & Superpower Antagonism)


தமிழ் அரசியல் மற்றும் இராணுவத் தலைமைகளின் ஆகப்பெரிய வரலாற்றுத் தவறு (Historical Blunder) என்னவென்றால், அவர்கள் 'பூகோள அரசியல்' (Geopolitics) மற்றும் 'தேசிய பாதுகாப்பு' (National Security) ஆகியவற்றின் அடிப்படைக் கோட்பாடுகளைப் புரிந்து கொள்ளாததே ஆகும். இதில் முதன்மையானது இந்தியாவின் மீதான கண்மூடித்தனமான எதிர்ப்பு நிலை (Anti-Indian Sentiment).


கடந்த காலத்தில் எந்தோ ஒரு குறிப்பிட்ட பிரதமரோ அல்லது அரசியல்வாதியோ செய்த தவறுகளுக்காக, ஒட்டுமொத்த இந்திய தேசத்தையும் நிரந்தர எதிரியாகப் பார்ப்பது இராஜதந்திர முட்டாள்தனம் (Diplomatic Naivety). காலங்கள் மாறும்போது தலைவர்கள் மாறுவார்கள், அவர்களின் வெளியுறவுக் கொள்கைகளும் (Foreign Policies) மாறும் என்ற உலக அரசியல் எதார்த்தத்தை (Global Political Reality) தமிழ் தரப்பு உணரத் தவறியது. இந்தியாவை எதிர்த்துக்கொண்டு இலங்கையில் தமிழர்கள் எதையுமே சாதிக்க முடியாது என்பதுதான் புவியியல் எதார்த்தம் (Geographical Reality).


பல புத்தியற்ற ஜீவிகள், 'இந்தியா எங்களைக் கைவிட்டுவிட்டது, துரோகம் செய்துவிட்டது' என்று தங்களின் சொந்தத் தவறுகளை மறைக்கக் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், இந்தியாவின் அமைதிப்படை (IPKF) வந்திறங்கியபோது, ஒரு வல்லரசின் இராணுவத்தோடு சண்டையிடத் துணிந்தது யாருடைய தவறு? அது தமிழ்த் தலைமையின் இமாலய வரலாற்றுத் தவறு!


வல்லரசுச் சண்டித்தனமும் அதன் விளைவுகளும் (Superpower Conflict & Its Consequences):


ஒரு சிறிய இனம், உலக வல்லரசுகளோடு (Superpowers) சண்டித்தனம் காட்டினால் என்ன நடக்கும் என்பதற்கு உலக வரலாறே சாட்சி. இரண்டாம் உலகப் போரில் வல்லரசுக்கு எதிராகச் சண்டியர்த்தனம் காட்டிய ஜப்பான் (Japan) மீது இரண்டு அணுகுண்டுகள் (Nuclear Bombs) வீசப்பட்டன. அதன் பிறகு 50 ஆண்டுகள் அமெரிக்க இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழும், கடுமையான பொருளாதாரக் கட்டுப்பாடுகளின் கீழும் ஜப்பான் முடங்கிக் கிடக்க வேண்டியிருந்தது.


இன்று தமிழர்களிடம் உலகத்தை எதிர்கொள்ள என்ன அரசியல் அதிகாரம் (Political Power) இருக்கிறது? உலக அரசியலைப் பற்றி நம் மக்களுக்கு என்ன புரிதல் இருக்கிறது? உலக நடப்புகளைப் படிக்காமல், சும்மா 'இந்தியா செய்துவிட்டது, இலங்கை செய்துவிட்டது' என்று அரசாங்கங்கள் மீது பழி போடுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை.


இன்றைய உலகையே பாருங்கள் (Contemporary Global Conflicts):


ஈரான் (Iran): அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்து அடிக்கும்போது, உலக நாடுகளால் என்ன செய்ய முடிகிறது?


உக்ரைன் (Ukraine): ரஷ்யா என்ற வல்லரசு உள்ளே புகுந்து தாக்கும்போது, ஐரோப்பாவோ அல்லது அமெரிக்காவோ உக்ரைனை முழுமையாகக் காப்பாற்ற முடிகிறதா?


உலகளவில் அங்கீகாரம் பெற்ற, சொந்த இராணுவம் கொண்ட நாடுகளாலேயே வல்லரசுகளுக்கு முன்னால் ஒன்றும் செய்ய முடியாதபோது, ஒரு சிறிய சிறுபான்மை இனமான தமிழர்கள் உலக அரசியலைப் படிக்காமல், விவேகமின்றி (Without Pragmatism) உணர்ச்சி அரசியலில் மட்டுமே மூழ்கிக் கிடப்பது தற்கொலைக்குச் சமம். வீரத்தை விட விவேகமும், உலக அரசியலைக் கூர்ந்து கவனிக்கும் புத்திசாலித்தனமுமே இப்போதைய அவசரத் தேவை."

Eel History Page: 279

Title: Geopolitical Blindness: Anti-Indian Sentiment & Superpower Antagonism


"The most catastrophic historical blunder of the Tamil political and military leadership was their complete failure to comprehend the foundational principles of 'Geopolitics' and 'National Security'. Foremost among these failures was the blind and uncompromising anti-Indian sentiment.


To view the entire nation of India as a permanent enemy simply due to the missteps of a specific Prime Minister or politician in the past is an act of sheer diplomatic naivety. The Tamil leadership failed to realize the global political reality that as times change, leaders change, and consequently, their foreign policies evolve as well. The geographical reality dictates that Tamils can achieve absolutely nothing in Sri Lanka by maintaining an antagonistic stance toward India


Many irrational individuals deflect blame from their own strategic failures by claiming, 'India abandoned us; India betrayed us.' But when the Indian Peace Keeping Force (IPKF) landed on our shores, whose mistake was it to choose a direct military confrontation with the armed forces of a regional superpower? That was the paramount historical blunder of the Tamil leadership.


Superpower Conflict & Its Consequences:


World history stands as a living testament to what happens when a small, stateless nation exhibits unbridled antagonism against global superpowers. During World War II, Japan displayed such defiance against a rising superpower, resulting in two nuclear bombs being dropped on its territory. Following that catastrophe, Japan was forced to endure nearly 50 years under the absolute occupation of the U.S. military and suffocating economic constraints.


Today, what political power do Tamils possess to confront the international arena? What deep understanding of global politics exists among our people? There is absolutely no purpose in shifting blame onto governments, repeatedly crying out 'India did this' or 'Sri Lanka did that,' while failing to critically read international dynamics.


Just observe the contemporary global conflicts unfolding today:


Iran: When a superpower like the United States imposes severe economic sanctions and strikes, what can the rest of the world realistically do to stop it?


Ukraine: When a superpower like Russia invades and launches an assault, can either Europe or the United States completely rescue Ukraine from devastation?


When globally recognized sovereign states with their own established standing armies find themselves powerless before global superpowers, it is absolute diplomatic suicide for the Tamils—a small, minority population—to remain submerged in emotional politics without reading world dynamics and acting with pragmatism. More than raw valor, it is strategic acumen (pragmatism) and a sharp, intellectual observation of global geopolitics that define our most urgent need today."



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக