வல்லரசுகளின் உளவியலும்... ராஜதந்திரத்தை விழுங்கிய உணர்ச்சி வேகமும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வல்லரசுகளின் உளவியலும்... ராஜதந்திரத்தை விழுங்கிய உணர்ச்சி வேகமும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 29 ஜூன், 2026

அத்தியாயம் 129: வல்லரசுகளின் உளவியலும்... ராஜதந்திரத்தை விழுங்கிய உணர்ச்சி வேகமும்!

 






அத்தியாயம் 129: வல்லரசுகளின் உளவியலும்... ராஜதந்திரத்தை விழுங்கிய உணர்ச்சி வேகமும்!

1987 அக்டோபரில் யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் இந்திய ராணுவத்துடன் மோதலைத் தொடங்கிய தமிழ் தரப்பின் செயல்பாடுகளை நாம் ஆழமாக ஆராயும் போது, உலக அரசியல் சதுரங்கத்தின் மிக அடிப்படையான ஒரு விதியைத் தமிழ் தலைமைகள் முற்றிலும் அறியாமல் இருந்த கசப்பான உண்மை வெளிச்சத்திற்கு வருகின்றது. சர்வதேச அரங்கில் ஒரு வல்லரசு நாடு (Superpower) என்பது எப்போதும் தங்களின் இறமையையும், பிராந்திய ஆதிக்கத் திமிரையும் நிலைநாட்டவே நினைக்கும் என்பதை ஈழத்துத் தலைமைகள் கணிக்கத் தவறின.

பேர்ல் ஹார்பர் தத்துவமும்... கொழும்புச் சம்பவத்தின் பின்னணியும்

உலக வரலாற்றில் வல்லரசுகளின் உளவியலுக்கு ஆகச்சிறந்த உதாரணம் அமெரிக்கா. 1941-ல் ஜப்பான் நாடு தங்களின் 'பேர்ல் ஹார்பர்' கடற்படைத் தளத்தின் மீது ஒரு தற்காலிகத் தாக்குதலை நடத்தியதற்காக, அமெரிக்கா ஒட்டுமொத்த ஜப்பானையும் நிலைகுலையச் செய்து, இரண்டு அணு குண்டுகளைப் போட்டு அந்த நாட்டையே அடிபணிய வைத்தது. அதுதான் வல்லரசுகளின் ராணுவக் கோட்பாடு.

இலங்கையின் வரலாற்றிலும் அப்படியொரு அரிய சந்தர்ப்பம் இந்தியாவுக்குக் கிடைத்தது. 1987 ஜூலை 30 அன்று கொழும்பில் வைத்து 'விஜேமுனி' என்ற சிங்களச் சிப்பாய், அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைத் துப்பாக்கிக் கட்டையால் தலையிலேயே அடித்தான். அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசாக இருந்திருந்தால், தன் நாட்டுத் தலைவன் மீது கை வைத்த அடுத்த நொடியே ஒட்டுமொத்த ராணுவத்தையும் கொழும்பில் இறக்கி, இலங்கை அரசாங்கத்தையே தூக்கி எறிந்திருக்கும். சர்வதேசச் சட்டங்கள் எதைக் கொண்டும் அதனை எவருமே தடுத்திருக்க முடியாது. ஆனால், இந்தியா அப்போது சண்டை வேண்டாம் என்ற அமைதிப் போக்கிலேயே நகர்ந்தது.

வரலாற்றுப் பாடம்: எதிரியின் பலமறிந்து மக்களைக் காக்கும் ராஜதந்திரம்!

இந்த 129-வது அத்தியாயத்தின் வழியே வாசகர்கள் தங்களின் நெஞ்சில் ஆழப் பதிக்க வேண்டிய, ஈழப் போராட்டத்தின் ஆக உன்னதமான மையக் கருத்து இதுதான்: "ஒரு பிரச்சினை வந்தால் அதனை ராஜதந்திர ரீதியாகத் தீர்க்க வேண்டும். வல்லரசுகள் அநியாயம் செய்கிறது என்பதற்காக, நாமும் உணர்ச்சிவசப்பட்டு அவர்களோடு போரைத் தொடங்கக் கூடாது. நமக்குத் தேவை நமது மக்களையும் நமது போராட்டங்களையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டியது மட்டுமே ஆகும்."

நாம் முந்தைய அத்தியாயங்களில் விவாதித்த அதே "கருங்கல்-முட்டை" தத்துவம் இந்த இடத்திலும் மிகக் கொடூரமாக வேலை செய்தது. இந்தியா என்ற அந்த மாபெரும் பிராந்தியக் கருங்கல், திலீபனின் உண்ணாவிரதத்தை அலட்சியப்படுத்தியது, 17 போராட்டக்காரர்களைச் சிங்கள அரசிடம் காட்டிக்கொடுக்க முயன்றது எல்லாமே அநியாயங்கள் தான். ஆனால், ஒரு வல்லரசு அநியாயம் செய்கிறது என்பதற்காக, நாமும் கோபப்பட்டு தற்காப்பு என்ற பெயரில் முட்டையை எடுத்து கருங்கல்லின் மீது மோதினால், அழியப் போவது நமது சொந்த மக்கள் தான் என்ற உலக யதார்த்தத்தை தமிழ் இயக்கங்களின் தலைமை பார்க்கத் தவறிவிட்டது.

"தாங்கள் செய்வதே ஆகச்சிறந்த உலக அரசியல் ராஜதந்திரம்" என்று நம்பிய தலைமைகள், நம்மைக் காட்டிலும் பல மடங்கு பலம் வாய்ந்த வல்லரசை எவ்வாறு கையாண்டு, நமது மக்களையும் நமது போராட்டத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையின்றிச் செயல்பட்டனர். "நமது சொந்த விரலை வைத்தே நமது கண்ணைக் குத்திக்கொள்ளும்" இந்த உணர்ச்சி வேகத்தால், இறுதியில் இந்தியப் பேரரசு விரித்த உளவு மற்றும் ராணுவப் பொறிக்குள் நாம் மிக எளிதாக விழுந்தோம். அந்த வல்லரசைத் தந்திரமாக வளைத்து, நமது மக்களுக்குரிய சிவில் கட்டமைப்பைப் பெற்றுக்கொள்ளத் தவறியதன் இறுதி விளைவு—இன்று வரை ஈழத்து மண்ணில் தமிழ் மக்கள் தங்களின் அனைத்து அரசியல் உரிமைகளையும் இழந்துவிட்டு, பேரினவாத அரசு செய்கின்ற ஒடுக்குமுறைகளை வேறு வழியின்றிச் சகித்துக் கொண்டு நிராயுதபாணிகளாக வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்ற கசப்பான உண்மையை வரலாறு நமக்கு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல உணர்த்துகிறது.

(வரலாறு தொடரும்...)

Chapter 129: The Psychology of Superpowers... and the Emotionalism That Devoured Diplomacy!

When we critically analyze the Tamil leadership's choice to initiate conventional hostilities with the Indian military at the Jaffna University grounds in October 1987, a devastating historical truth emerges: the Tamil high command completely failed to comprehend the foundational rules of global statecraft. On the international stage, a superpower operates fundamentally to preserve its institutional sovereignty and project its regional dominance—a baseline geopolitical reality that the strategic command of Eelam catastrophically miscalculated.

The Pearl Harbor Doctrine and the Context of the Colombo Incident

The prime historical manifestation of superpower psychology is evidenced by the United States. In 1941, following Japan’s tactical assault on the 'Pearl Harbor' naval base, the United States retaliated by deploying two atomic bombs, completely pulverizing Japanese territory to enforce absolute surrender. That is the structural military doctrine of a superpower.

Sri Lankan history witnessed a highly parallel leverage point for India. On July 30, 1987, in Colombo, a Sinhalese naval rating named 'Wijemuni' struck Indian Prime Minister Rajiv Gandhi with a rifle butt during a guard of honor. Had India reacted with the aggressive unilateralism of a Western superpower, New Delhi could have instantly deployed the full weight of its armed forces to capture Colombo and dissolve the Sri Lankan administration. No framework of international law could have frozen such a reaction, as it constituted a direct assault on the head of a sovereign state. Yet, India deliberately pursued an institutional path of restraint and conflict resolution.

Historical Lesson: Strategically Evaluating Adversary Might to Safeguard the Masses!

Through this 129th chapter, readers must deeply internalize the absolute core philosophical message of the entire national struggle: "When a geopolitical crisis emerges, it must be resolved through cold statecraft. Simply because a superpower enforces asymmetric compromises, a liberation front must never allow raw emotion to dictate total warfare. The ultimate baseline objective must always remain the calculated preservation of our people and the structural survival of our struggle."

The metaphor of the "rock and the egg" attains its absolute analytical validation here. The reality that India—the regional "rock"—neglected Thileepan's hunger strike and permitted the capture of the 17 cadres remains an absolute violation of moral equity. However, blinded by the illusion that raw battlefield valor could bypass global power dynamics, the leadership chose to hurl the "egg" directly against the rock, failing to see that the ultimate human cost would be borne entirely by the Tamil civilian populace.

Operating under the fatal assumption that "tactical military defiance constitutes masterful diplomacy," the high command lacked the strategic foresight to bend and manipulate a superior global power to insulate the civilian infrastructure. By implementing the self-destructive strategy of "using our own fingers to violently pierce our own eyes," the struggle walked directly into the structural intelligence traps orchestrated by external powers. Failing to utilize India's presence as a diplomatic shield to systematically wrench constitutional autonomy from the state left the Tamil nation entirely isolated. History profoundly unveils at this moment that this absence of long-term strategic foresight anchored the Tamil populace into a legacy of permanent structural marginalization, forcing them to survive empty-handed under state oppression.

(History continues...)