வெள்ளி, 19 ஜூன், 2026

அத்தியாயம் 12: வஞ்சகத்தால் வீழ்ந்த தமிழ் ஆட்சி — அபயகிரி விகாரைக்குள் இருக்கும் ஈஸ்வரன்!



ஈஸ்வரன்!

முந்தைய அத்தியாயத்தில் நாம் பார்த்தபடி, ஐந்து தமிழ் வேந்தர்களான 'பஞ்ச திராவிடர்கள்' அநுராதபுரத்தை 14 ஆண்டுகள் (பொ.ஆ.மு. 103 - பொ.ஆ.மு. 89) மிக வலிமையாக ஆட்சி செய்து வந்தனர். ஆனால், வஞ்சக வலையமைப்பாலும் உள்நாட்டுச் சூழ்ச்சிகளாலும் வலகம்பா (வட்டகாமினி அபய) மீண்டும் அநுராதபுரத்தைக் கைப்பற்றினான்.

1. வரலாற்றுத் தில்லுமுல்லு: சமணப் பள்ளியா? சைவாலயமா?

மகாவம்சத்தின்படி, வலகம்பா நாட்டை விட்டு ஓடும்போது 'கிரி' என்ற நிகந்தன் (சமணர்) அவமானப்படுத்தியதாகவும், அதற்குப் பழிவாங்கவே அவனது சமணப் பள்ளியை இடித்துவிட்டு, தன் பெயரையும் (அபய) அவனது பெயரையும் (கிரி) இணைத்து 'அபயகிரி விகாரை' கட்டியதாகவும் பௌத்த நூல்கள் கூறுகின்றன.

ஆனால், இங்குதான் வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ்.திருச்செல்வம் அவர்களின் கள ஆய்வு ஒரு மாபெரும் உண்மையை வெளிக்கொண்டு வருகிறது! தேவநம்பியதீசன் காலத்திற்குப் பிறகும், தமிழ் மன்னன் எல்லாளனின் 44 ஆண்டுகால (பொ.ஆ.மு 145-101) பொற்கால ஆட்சியிலும் அநுராதபுரத்தின் வடக்குப் பகுதியில் பிரசித்தி பெற்ற 'ஈஸ்வரன் கோயில்' (சிவன் கோயில்) ஒன்று இருந்துள்ளது. புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்களான மலலசேகர மற்றும் அரிச்சந்திர ஆகியோரும் தங்களின் நூல்களில் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். கிரி நிகந்தர் என்ற துறவியின் பொறுப்பில் இந்தச் சிவன் கோயிலும் சமணப் பள்ளியும் பராமரிக்கப்பட்டு வந்தன.

2. விகாரைக்குள் கிடைத்த அதிசய ஆதாரம்!

ஆய்வாளர் திருச்செல்வம் அவர்கள் இந்த உண்மையை வெறும் புத்தகங்களோடு நிறுத்தாமல், நேரடியாக அநுராதபுர அபயகிரி விகாரை வளாகத்திற்கே சென்று தேடினார். தூபியைச் சுற்றி யக்ஷ, நாக வழிபாட்டுச் சின்னங்களுக்கு நடுவே, மிக முக்கியமான சிவ வழிபாட்டுச் சின்னம் ஒன்று வேறு பெயரில் இருப்பதைக் கண்டறிந்தார்.

இறுதியாக, விகாரை அலுவலகத்தில் இருந்த ஒரு பழமையான ஓவியமும், ஆவணக் குறிப்பும் ஒட்டுமொத்த உண்மையையும் உடைத்தன!

 அந்த ஓவியத்தில், அபயகிரி தூபியைக் கட்டுவதற்கு முன்பு, அங்கிருந்த சக்தி வாய்ந்த சிவலிங்கத்தையும், நந்தி தேவரையும் தூபியின் உள்ளே ஸ்தாபிப்பதற்காக நடக்கும் புனித பூசையும், அதில் மன்னன் வட்டகாமினி பயபக்தியுடன் கலந்து கொள்ளும் காட்சியும் சித்தரிக்கப்பட்டிருந்தது!

3. தூபியின் உள்ளே வாழும் சிவன்!

வட்டகாமினி, தமிழ் மன்னர்களின் ஆதரவோடு இருந்த அந்தச் சிவன் கோயிலை இடித்தாலும், அதன் மூல மூர்த்தியான சிவலிங்கத்தினதும், நந்தி தேவரினதும் சக்தியைக் கண்டு அஞ்சினான்.

அதனால்தான், தான் இடித்த அந்தச் சக்தி வாய்ந்த சிவலிங்கத்தையும் நந்தி தேவரையும் ஒரு புனிதப் பேழையில் வைத்து, தான் புதிதாகக் கட்டிய பிரம்மாண்டமான அபயகிரி தூபியின் மையப் பகுதியில் (நடுப்பகுதியில்) ஸ்தாபித்தான்! அதற்குப் பாதுகாவலாகக் குபேரனின் காவலர்களான சங்கநிதி மற்றும் பத்மநிதியை வாசலில் நிறுத்தினான்.

தர்க்கரீதியான உண்மை: மகாவம்சம் கூறுவது போல அது வெறும் பௌத்த விகாரை மட்டுமல்ல; அன்று முதல் இன்று வரை அந்தப் பிரம்மாண்டமான பௌத்த தூபியின் உள்ளிருந்து ஆதி ஈழத்துச் சிவனும் நந்தி தேவரும்தான் இன்றும் அருளாட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்!

எழுது கோல்முனையில் நெறியூரான் (வரலாற்றுத் தரவுகள்: ஆய்வாளர் என்.கே.எஸ்.திருச்செல்வம்)




Chapter 12: The Fall of Tamil Rule by Deception — The Hidden Ishwaram of Abhayagiri Vihara!

Special Note & Copyright Disclaimer:

The vital historical data regarding the Abhayagiri Vihara and the hidden Shiva Lingam featured in this chapter is sourced from the rigorous field research and analytical essays of the renowned Sri Lankan historian, Mr. N.K.S. Thiruchelvam. Respecting his immense dedication, readers are strictly requested not to plagiarize or copy-paste this content onto other websites without his prior permission. You are most welcome to share the official links on Facebook to support his work.

Following the glorious era of the 'Pancha Dravida' (103 BCE – 89 BCE), who ruled Anuradhapura with absolute sovereignty for 14 years, the political pendulum of Eelam shifted once again. Through a web of internal conspiracies, foreign subversion, and religious backing, King Valagamba (Vattagamini Abhaya) managed to reclaim the throne. However, behind the grand construction of the world-famous Abhayagiri Vihara lies a suppressed history of a powerful Shaivite temple.

1. The Historical Cover-Up: A Jain Monastery or a Shiva Temple?

According to the orthodox narratives of the Mahavamsa, while Valagamba was fleeing into exile, a Jain ascetic named 'Giri' humiliated him. To exact revenge, Valagamba allegedly demolished Giri's Jain dwelling upon his return and built a massive Buddhist stupa, blending their names—Abhaya and Giri—into 'Abhayagiri Vihara'.

However, historical analysis shatters this singular narrative. Even after the initial introduction of Buddhism, the indigenous faiths held immense influence. During the 44-year golden rule of the Tamil King Ellalan (145 BCE – 101 BCE), a magnificent Sivan Temple (Ishwaram) flourished in the northern part of Anuradhapura. Renowned historians such as Malalasekera and Harischandra have explicitly documented in their research that a grand Shiva temple was demolished to lay the foundations of the Abhayagiri Vihara. This entire complex, including the Shiva temple and surrounding Jain dwellings, was under the care of the chief ascetic, Giri Nigantha.

2. The Astonishing Proof Unearthed Within the Vihara!

Determined to find undeniable physical evidence rather than relying solely on texts, researcher N.K.S. Thiruchelvam directly surveyed the ancient Abhayagiri Vihara complex. Amidst the various Yaksha and Naga motifs surrounding the stupa, he spotted a crucial, undeniable symbol of Shiva worship—deliberately preserved but presented under a different name.

The ultimate revelation awaited him inside the archives of the Vihara office, where he discovered an ancient, historic painting and corresponding textual records:

 The painting captured a sacred, solemn ritual that took place right before the construction of the colossal stupa. It depicted King Vattagamini himself participating in a grand puja, bowing down in deep reverence before a powerful Shiva Lingam and Nandi Deva that stood at the exact site!

3. Shiva Reigning from Within the Stupa

Though Vattagamini demolished the external structures of the ancient Shiva temple due to political alignments, he was profoundly terrified of the spiritual energy of its deities. He feared the karmic consequences of completely destroying such a revered site.

Consequently, he placed the sacred Shiva Lingam and the Nandi Deva into a holy casket and enshrined them directly at the very center (core) of the colossal Abhayagiri Stupa! To safeguard this sacred energy, he installed Sankhanidhi and Padmanidhi—the celestial guardians of Lord Kubera—at the main entrance of the monument as protective deities.


The Ultimate Logical Reality: Contrary to the superficial narratives of absolute religious displacement, the ancient Ishwaram of Eelam was never truly obliterated. From the ancient past to this very day, Lord Shiva and Nandi Deva continue to reign supreme from the deep, hidden core of the magnificent Abhayagiri Stupa!

Written by: Neriyooran (Historical Data: Researcher N.K.S. Thiruchelvam)





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக